கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது புதிய ஆட்சியராக பிரதாப் பொறுப்பேற்பு
கன்னியாகுமரி, 31 மே (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த புதிய மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய பிரதாப் IAS அவர்களை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மரியாதைக்குரிய நிஷாந்த் கிருஷ்ணா IAS வரவேற்றார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது
Kanyakumari Collector Prathab


கன்னியாகுமரி, 31 மே (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த புதிய மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய பிரதாப் IAS அவர்களை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மரியாதைக்குரிய நிஷாந்த் கிருஷ்ணா IAS வரவேற்றார்.

தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது புதிய ஆட்சியராக பிரதாப் IAS இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

என்றும், அனைத்து துறை அலுவலர்களும் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், மீனவர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாக இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை அரசுக்கு பரிந்துரைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுற்றுலா வளம் நிறைந்த கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த அமைச்சருடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN