காஸ்தார் கிரீடா மகோத்ஸவ் 2026 - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் சுனில் ஷெட்டி பங்கேற்பு
நாக்பூர், 31 மே (ஹி.ச.) மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் நாக்பூரில் இன்று காஸ்தார் (சன்சத்) கிரீடா மகோத்ஸவ் விளையாட்டுத் திருவிழாவை தொடங்கி வைத்தனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அடங்கிய இந்த நிகழ
காஸ்தார் கிரீடா மகோத்ஸவ் 2026 - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் சுனில் ஷெட்டி பங்கேற்பு


நாக்பூர், 31 மே (ஹி.ச.)

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் நாக்பூரில் இன்று காஸ்தார் (சன்சத்) கிரீடா மகோத்ஸவ் விளையாட்டுத் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அடங்கிய இந்த நிகழ்வு மே 31 முதல் ஜூன் 7 வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக,நடிகர் சுனில் ஷெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

குழந்தைகளை எதிர்மறை தாக்கங்களில் இருந்து விலக்கி, அவர்களை ஒருமுகப்படுத்த விளையாட்டை ஊக்குவிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

விளையாட்டு, உடல்நலம் மற்றும் நல்வாழ்வு. நாம் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தால், அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இன்று நாக்பூர் போன்ற நகரத்தில், லட்சக்கணக்கான குழந்தைகள் விளையாட்டில் ஈடுபடுவதை நீங்கள் காண்பீர்கள்.

குழந்தைகள் விளையாட்டில் கவனம் செலுத்தும்போது, அவர்களுக்கு வேறு எதற்கும் நேரம் இருக்காது. என் வாழ்க்கையிலும், நேர்மறையான விஷயங்கள் நடந்திருந்தால், இந்த வயதிலும் மக்கள் என் உடற்தகுதி மற்றும் ஆரோக்கியம் பற்றிப் பேசுகிறார்கள் என்றால், அது முழுக்க முழுக்க விளையாட்டின் மீதான என் காதலால் மட்டுமே. நம் குழந்தைகளை எதிர்மறை தாக்கங்களில் இருந்து விலக்க, அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவது மிகவும் முக்கியம்.

அதனால்தான் எங்களைப் போன்றவர்கள் ஆண்டுதோறும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வது முக்கியம். இதனால் விளையாட்டை விட ஆரோக்கியத்தைப் பேண சிறந்த வழி எதுவுமில்லை என்ற செய்தி பரப்பப்படுகிறது.

கேலோ இந்தியா திட்டம் அவசியமானது. பல இடங்களில் மாரத்தான் மற்றும் பிற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால் இங்கே நாக்பூரில் நடப்பது மிகவும் தனித்துவமானது. ஏனெனில் மக்கள் 50 முதல் 60 வெவ்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதை இந்த அளவில் காண்பது உண்மையிலேயே அழகானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b