Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 31 மே (ஹி.ச.)
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாகவே மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் குறைந்த அளவில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதனால், பல்வேறு பகுதிகளுக்கு செல்ல நீண்ட நேரமாக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த பயணிகள் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், பயணிகளுக்காக மாற்று பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களை பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P