Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 31 மே (ஹி.ச)
மயிலாடுதுறை அறுபத்துமூவர்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த செல்வம் (50), கற்பகம் (42), கவியரசன் (14) ஆகிய மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.
கற்பகம் இன்று காலை குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்வீட்டை சேர்ந்த திமுக கவுன்சிலர் ஜெயலட்சுமி முருகன் என்பவரின் மகன் அசோக் (25) முன்விரோதம் காரணமாக கற்பகத்தை அறிவாளால் வெட்டி உள்ளார். அவரை தடுக்க சென்ற கணவர் செல்வம், மகன் கவியரசன் ஆகியோரும் வெட்டு காயம் அடைந்தனர்.
மூவரும் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுள் படுகாயம் அடைந்த கற்பகம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட அசோக் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் என்ன காரணத்துக்காக சம்பவம் நடைபெற்றது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN