தமிழக ஆசிரியர் கிரிஜாவிற்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி, 31 மே (ஹி.ச.) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மன்கி பாத் எனும் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகின்றார். அந்த வகையில் இன்று நடைபெற்ற 134வது மன்கி பாத் ந
தமிழக ஆசிரியர் கிரிஜாவிற்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு


புதுடெல்லி, 31 மே (ஹி.ச.)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மன்கி பாத் எனும் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகின்றார்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற 134வது மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருவதால், கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம். உடலில் நீர்ச்சத்து இருப்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் வெயிலில் வெளியே செல்ல நேர்ந்தால், மிகுந்த எச்சரிக்கையுடனும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு செல்லுங்கள்.

சமீபத்தில், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்துக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் அங்கு பல கூட்டங்களில் கலந்துகொண்டேன்.

அப்போது, ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதம் கொள்ளச் செய்யும் ஒரு தருணம் அமைந்தது.

நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில், சோழர் காலத்தைச் சேர்ந்த பழங்கால செப்புத் தகடுகள் இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.

இவ்விழாவில் நெதர்லாந்து பிரதமரும் கலந்துகொண்டார். இந்தச் செப்பேடுகள் தொடர்பாக, இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் எனக்குத் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுடன், பெருமித உணர்வையும் தெரிவித்து வருகின்றனர்.உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையேயும் ஒரு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

சோழ வம்சத்தின் சாதனைகள் குறித்த விளக்கங்களும் இச்செப்பேடுகளில் இடம்பெற்றுள்ளன.

மா சாகுபட்டில் ஈடுபட்டுள்ள விவாசாயிகளை நான் பாராட்ட விரும்புகிறேன். நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, நீங்கள் வெறும் சாதாரண மா விவசாயிகள் அல்ல. நீங்கள் உண்மையிலேயே மிகச் சிறந்தவர்கள்.

இதேபோல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். இந்தியாவில், கோடைக்காலத்தில் மாம்பழங்களைப் பற்றிப் பேச்சு எழாத வீடு என்று ஒன்றுமே இல்லை. அதற்கே மாம்பழம் மிகுந்த சுவையுடன் நறுமணம் கொண்டது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த தேசிய முதுநிலைத் தடகளப் போட்டிகளில் புதிய சாதனைகளை படைத்த குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர். தேவ் மீணா குல்தீப் குமார் உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

விளையாட்டு வீரர்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளித்து வருகின்றனர்.

இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும், நம்மை ஊக்கப்படுத்தும் ஏதேனும் ஒரு செயல் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெரும்பாலும், இத்தகைய முயற்சிகள் பரவலாகப் பேசப்படுவதில்லை. அவற்றை நாம் அறிய வரும்போது, நாடு முன்னேறிச் செல்கிறது எனும் நம் நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.

இத்தகைய முயற்சிகளை நீங்கள் அவசியம் தேடி அறிய வேண்டும் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன். சமூகத்திற்கு நற்பணிகளை ஆற்றிவரும் மக்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

அவர்களைப் பாராட்டுங்கள், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இயலுமென்றால், நீங்களும் ஏதேனும் ஒரு நற்பணியில் ஈடுபட வேண்டும்.

சமீபத்தில் தமிழகத்தின் நாகர்கோவிலில், நான் ஒரு ஆசிரியரைச் சந்தித்தேன். அவரை நான் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பும் சந்தித்திருந்தேன்.

நான் குறிப்பிடுவது கிரிஜா அம்மாவைத்தான். இந்தச் சந்திப்பின்போது, பல இளம் மாணவர்களும் அவருடன் உடனிருந்தனர். கிரிஜா அம்மா ஏறக்குறைய 15 பள்ளிகளை நிர்வகித்து வருகிறார்.

அவற்றுள், சென்னையில் அமைந்துள்ள ஒரு பள்ளி முதன்மையான கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. அவரது தேசபக்தி உணர்வு, ஒவ்வொரு இந்தியருக்கும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது.

மன் கி பாத் நிகழ்ச்சியிலிருந்து உத்வேகம் பெற்ற கிரிஜா அம்மா, நாட்டின் வீரர்களின் நலனுக்காகத் தானும் பங்களிக்க வேண்டும் என்று உறுதியேற்றார். அந்த நோக்கத்தை முன்னிட்டு, தனது பள்ளிகள் அனைத்திலும் பயிலும் மாணவர்களை இதில் பங்கேற்குமாறு அவர் ஊக்கப்படுத்தினார்.

ஒவ்வொரு குழந்தையும் தினமும் ஒரு ரூபாய் வீதம் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஓராண்டு காலத்தில், ஒவ்வொரு மாணவரும் 365 ரூபாயைப் பங்களித்தனர். இத்தகைய சிறிய முயற்சியால் ஏறக்குறைய 40 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது.

இந்த முழுத் தொகைக்குமான காசோலை ஒன்றை, கிரிஜா அம்மா என்னிடம் ஒப்படைத்தார்.

அவருடன் நான் உரையாடியபோதுதான், இந்தியா மீது அவருக்குள்ள பக்தி எவ்வளவு பெரியது என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Hindusthan Samachar / vidya.b