Enter your Email Address to subscribe to our newsletters

காசியாபாத், 31 மே (ஹி.ச)
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் காசியாபாத் மாவட்டம் கோடா பகுதியில் மே 28-ம் தேதி நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது இளைஞர் சூர்யா பிரதாப் சௌகான் உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மூன்று முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அசாத் தலைமறைவாக இருந்தார்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர், இன்று அதிகாலை காவல்துறையினருடனான என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்டவர், காசியாபாத் கோடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதரஸா வாலி கலியைச் சேர்ந்த நவாப்பின் மகன் அசாத் ஆவார். இவர் மீது ரூ.50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த என்கவுண்டர், கோடா மற்றும் இந்திராபுரம் காவல் நிலைய அதிகாரிகளுக்கு இடையே நடந்ததாக காசியாபாத் காவல்துறை ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக துணை ஆணையர் தவல் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
அசாத் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அசாத் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தற்காப்புக்காக பதிலுக்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் சுடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒரு காவலருடன் அசாத்தும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
என்கவுண்டரின் போது பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கைத்துப்பாக்கியை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த இளைஞர் சூர்யா பிரதாப்பின் தாயார், தான் ஒருவரின் என்கவுண்டரை மட்டுமே பார்த்ததாகவும், அசாத்தின் புகைப்படத்தை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், மற்ற குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவரின் அண்டை வீட்டுக்காரரான அங்கித் என்பவர், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்து இடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b