சென்னையில் இலங்கைத் தமிழ் இளம்பெண் படுகொலை வழக்கு - முக்கிய குற்றவாளி சுமந்த் சக்திவேல் கைது
சென்னை, 31 மே (ஹி.ச.) சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மதுபான பாரில் நேற்று இரவு மது அருந்திவிட்டு நடனமாடியபோது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பாதுகாவலர்கள் இரு குழுவினரையும் பாரிலிருந்து வெளியேற்றினர். ஆ
சென்னையில் இலங்கைத் தமிழ் இளம்பெண் படுகொலை வழக்கு - முக்கிய குற்றவாளி சுமந்த் சக்திவேல் கைது


சென்னை, 31 மே (ஹி.ச.)

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மதுபான பாரில் நேற்று இரவு மது அருந்திவிட்டு நடனமாடியபோது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பாதுகாவலர்கள் இரு குழுவினரையும் பாரிலிருந்து வெளியேற்றினர்.

ஆனால் மோதல் சாலையிலும் தொடர்ந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 18 வயது யான்சி என்ற இளம்பெண் மீது, எதிர் தரப்பினர் காரை ஏற்றி கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த தாக்குதலில் யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யான்சியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த 17 வயது சிறுமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சுமந்த் சக்திவேலின் இரண்டு நண்பர்களை போலீசார் கைது செய்திருந்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

தொடர் விசாரணையின் முடிவில் தற்போது சுமந்த் சக்திவேலை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக வாகனத்தை ஆயுதமாக பயன்படுத்தி இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட சுமந்த் சக்திவேலிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த கொலைக்கான முழுமையான பின்னணி விரைவில் வெளிவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b