நெல்லை தாக்குதல் சம்பவம் - தாமிரபரணி கரையில் பதுங்கியிருந்த ஐயப்பனை சுட்டுப் பிடித்த போலீசார்
நெல்லை, 31 மே (ஹி.ச.) நெல்லை மாவட்டத்தில் கலவர வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த ஐயப்பன், வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்
சுட்டு பிடிப்பு


நெல்லை, 31 மே (ஹி.ச.)

நெல்லை மாவட்டத்தில் கலவர வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த ஐயப்பன், வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகள் தாமிரபரணி ஆற்றங்கரையை ஒட்டிய கிராமங்கள் மற்றும் தோப்புப் பகுதிகளில் ஒளிந்திருக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் முன்னரே எச்சரித்திருந்த நிலையில், இன்று அதிகாலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் படையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது பதுங்கியிருந்த ஐயப்பனை பிடிக்க முயன்றபோது, அவர் சிறப்பு படை காவலர் முத்துக்குமாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட பரபரப்பில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி ஐயப்பனை பிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam