ஆனைமங்கலம் செப்பேடுகளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமருக்கு நன்றி - நயினார் நாகேந்திரன்
சென்னை, 31 மே (ஹி.ச.) ஆனைமங்கலம் செப்பேடுகளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் க
Nainar Nagenthran


சென்னை, 31 மே (ஹி.ச.)

ஆனைமங்கலம் செப்பேடுகளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக நம் பாரத மக்களுடன் உரையாற்றும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி, இன்றைய தினம் ஆனைமங்கலம் செப்பேடுகள் குறித்து உரையாற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

சோழர் கால செப்பேடுகள் மீட்கப்பட்டிருப்பது நம் ஒட்டுமொத்த பாரத தேசத்திற்கே பெருமிதமானது என நம் மாண்புமிகு பிரதமர் அவர்கள் கூறியிருப்பது,

தமிழர்கள் ஒவ்வொருவருக்குமே நெகிழ்ச்சியான தருணம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

நெதர்லாந்தில் இருந்து ஆனைமங்கலம் செப்பேடுகளை மீட்டெடுத்ததோடு, உள்நாட்டிலும் அதன் பெருமையைத் தொடர்ந்து பறைசாற்றி வரும் நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் தகும்!

நமது தமிழரின் வரலாற்றுப் பொக்கிஷமான ஆனைமங்கலம் செப்பேடுகள் குறித்து நம் பாரதப் பிரதமர் ஆற்றிய உரையை அனைவரும் கேட்பீர்! நமது பாரதப் பிரதமர் அவர்களைப் போலவே தமிழர் கலாச்சாரத்தைப் போற்றுவீர் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN