Enter your Email Address to subscribe to our newsletters

காஜியாபாத், 31 மே (ஹி.ச)
உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாய் குஞ்ச் பகுதியில், பாராலிம்பிக் தடகள வீரர் ஒருவரின் உடல் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து காஜியாபாத் நகர துணை ஆணையர் தவல் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
நேற்று இரவு, கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாய் குஞ்ச் பகுதியில் உடல் ஒன்று கிடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உயிரிழந்தவர் பாராலிம்பிக் வீரர் சிராக் தியாகி என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் இது கொலையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
முதற்கட்ட விசாரணையில் இது கொலை சம்பவமாக தெரிகிறது
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
என்று அவர் கூறினார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் அடிப்படையில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என்று துணை ஆணையர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b