ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் குவிந்த பக்தர்கள்
ராமநாதபுரம், 31 மே (ஹி.ச) ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினத்தை ஒட்டி பல்வேறு மாவட
Rameshwaram Temple


ராமநாதபுரம், 31 மே (ஹி.ச)

ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்ட வைத்து திதி கொடுத்து வருகின்றனர்.

பின்னர் கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் பெற்று செல்கின்றனர்.

சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் திருக்கோவிலில் நான்கு ரத வீதிகளிலும் குவிந்துள்ளனர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் வளாகம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகள் மட்டுமின்றி தனுஷ்கோடி செல்லும் சாலையிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி எந்த ஒரு குற்றச்செயல்களும் நடைபெறாமல் இருப்பதற்காக நான்கு ரத வீதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN