Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மே (ஹி.ச.)
பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் மதகுருமார்கள் புதிய இருசக்கர வாகனங்களை மானிய விலையில் பெறுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாதே தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
பயனாளிகள் புதிய இருசக்கர வாகனம் வாங்குவதற்கு அரசு சார்பில் ரூபாய் 50,000 மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பள்ளிவாசல் பணிகளுக்காக பயணம் செய்யும் உலமாக்களின் போக்குவரத்து சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் சிறுபான்மையினர் நல அலுவலரை நேரில் அணுகி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்த பின்னரே பயனாளிகள் இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த மானியத் திட்டம் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Hindusthan Samachar / vidya.b