மதுரையில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு - வாகன ஓட்டிகள் அவதி
மதுரை, 31 மே (ஹி.ச.) அமெரிக்க-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் கப்பல் நிறுத்தம் எதிரொலியால் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் நிலைமை படிப்படியாக மாறி வரும் நிலையில் தற்போது சில இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட
Severe Petrol Shortage in Madurai


மதுரை, 31 மே (ஹி.ச.)

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் கப்பல் நிறுத்தம் எதிரொலியால் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் நிலைமை படிப்படியாக மாறி வரும் நிலையில் தற்போது சில இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மதுரை மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

எரிபொருள் ஏற்றிவரும் லாரிகள் உரிய நேரத்தில் வராததால், பகுதியில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

செயல்படும் ஒரு சில பெட்ரோல் நிலையங்களில் மட்டுமே எரிபொருள் கிடைப்பதால், அங்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை மணிக்கணக்கில் காத்திருந்து பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர்.

பெட்ரோல் மட்டுமின்றி, எல்பிஜி சிலிண்டர் மற்றும் இதர எரிபொருள் விநியோகத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்ந்து எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால் அன்றாட வாழ்க்கை மற்றும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்த திடீர் தட்டுப்பாடுக்கான காரணம் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் தரப்பிலிருந்து இதுவரை முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை.

Hindusthan Samachar / vidya.b