Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 மே (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளுக்காக வழங்கப்பட்ட மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா அரசை விமர்சித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அரசுப் பள்ளியிலேயே பூட்டை உடைத்து திருட்டு நடைபெறும் அளவுக்கு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மாணவிகளின் கல்விக்காக வழங்கப்பட்ட மடிக்கணினிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறிய அரசு தற்போது நிர்வாகத் தோல்வியில் சிக்கியுள்ளதாகவும், மாநிலத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கத் தவறிவிட்டதாகவும் எஸ்.ஜி.சூர்யா தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ