ஸ்ரீபெரும்புதூர் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - உறவினர்கள் 2 பேர் கைது
காஞ்சிபுரம், 31 மே (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே வரதராஜபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் தினேஷ் – திவ்யா தம்பதியரின் வீட்டின் மீது இன்று காலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக
கைது


காஞ்சிபுரம், 31 மே (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே வரதராஜபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் தினேஷ் – திவ்யா தம்பதியரின் வீட்டின் மீது இன்று காலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பாக சோமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக தினேஷின் உறவினர்களான சார்லஸ் (24) மற்றும் ராஜ்குமார் (23) ஆகியோர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

இந்த தாக்குதலில் வீட்டின் வெளியே இருந்த கயிறு கட்டிலும், ஜன்னல் கதவுகளும் லேசான சேதமடைந்தன.

திர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய சார்லஸ் மற்றும் ராஜ்குமாரை சோமங்கலம் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam