Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மே (ஹி.ச.)
திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி மீது பா.ஜ.க.வின் தூண்டுதலால் கடும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,
எங்கள் மீது நீங்கள் தொடுத்த அநீதி நிறைந்த தாக்குதலை அன்று எதிர்கொண்டோம்; அதே தாக்குதல் இன்று உங்கள் மீது தொடுக்கப்படும்போதும் அதனை எதிர்க்கிறோம். நீதியை நிலைநாட்ட ஒரே வழிதான் இருக்கிறது. அது, எந்த வழியில் யாரால் அநீதி இழைக்கப்பட்டாலும் அதனை நெஞ்சுரத்தோடு எதிர்கொள்வது.
அதிகாரத்தை அண்டி நிற்பதல்ல அரசியல்.
அதிகாரம் நிகழ்த்தும் அநீதியை எதிர்கொள்ள சமூகத்தைப் பயிற்றுவிப்பதுதான் அரசியல்.
சக நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN