Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மே (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன அமைப்பின் கீழ் உள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் மற்றும் கன்னடியன் கால்வாய் ஆகிய நான்கு கால்வாய்களின் கீழ் உள்ள 10,265 ஏக்கர் நேரடி பாசன நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து 2026 ஜூன் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 124 நாட்களுக்கு, 1710.83 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட வட்டங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 10,265 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைய உள்ளன. இதன் மூலம் கார் பருவ சாகுபடி பணிகள் ஊக்கமடைந்து, விவசாய உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ