Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 31 மே (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக பொறுப்பேற்க வருகை தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வருவாய் அலுவலர் இராமபிரதீபன பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
ஏழை எளிய அடுத்தட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு தேவையான அனைத்தையும் செய்து தரப்படும்.
அது மட்டுமல்லாமல் அனைத்து துறை அலுவலர் உடன் இணைந்து பொது மக்களுக்கு தேவையான அனைத்து விதமான திட்டங்களையும் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும், மக்களின் பிரச்சனைக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.
செங்கம் தொகுதியில் வளர்ச்சி குறைவாக உள்ளது எனவும், செய்யாறு தொகுதியில் தொழிற்சாலைகள் மூலம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதனை சரிசகமாக சரி செய்யப்படும் எனவும், அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இயல்பான முறையில் சாமி தரிசனம் செய்ய உடனடி ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
புதிய மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்க ஆட்சியர் அலுவலக அறைக்கு உள்ளே வந்த வந்தனா கார்க்,
முன்னாள் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்கும் போது, உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று கேட்ட ஆட்சியர் வந்தனா கார்க், அதற்கு முன்னாள் ஆட்சியர் நான் தான் திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த தர்ப்பகராஜ் என்று கூறியதும் ஆட்சியர் அறையில் அனைவரது மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN