சென்னை கோயம்பேட்டில் பார் மோதலில் விபரீதம் - கார் ஏற்றி இளம்பெண் படுகொலை
சென்னை, 31 மே (ஹி.ச.) சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மதுபான பாரில் நேற்று இரவு மது அருந்திவிட்டு நடனமாடியபோது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பாதுகாவலர்கள் இரு குழுவினரையும் பாரிலிருந்து வெளியேற்றினர். ஆ
சென்னை கோயம்பேட்டில் பார் மோதலில் விபரீதம் - கார் ஏற்றி 18 வயது இளம்பெண் படுகொலை


சென்னை, 31 மே (ஹி.ச.)

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மதுபான பாரில் நேற்று இரவு மது அருந்திவிட்டு நடனமாடியபோது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பாதுகாவலர்கள் இரு குழுவினரையும் பாரிலிருந்து வெளியேற்றினர்.

ஆனால் மோதல் சாலையிலும் தொடர்ந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 18 வயது யான்சி என்ற இளம்பெண் மீது, எதிர் தரப்பினர் காரை ஏற்றி கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த தாக்குதலில் யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யான்சியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த சிறுமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், பாரில் நடந்த மோதலின் தொடர்ச்சியாகவே கார் ஏற்றி கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளம்பெண் பலியான சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக,கே.11 சி.எம்.பி.டி காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b