Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 மே (ஹி.ச.)
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநரை விமர்சித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, பாஜக மாநிலத் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆளுநரின் செயலை அயோக்கியத்தனம் என்று கூறும் வைகோ, தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த பல்வேறு நிலைப்பாடுகளை முதலில் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய இறையாண்மை, முன்னாள் பிரதமர் கொலை வழக்கு, திமுகவுடனான அரசியல் உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டு வைகோவை விமர்சித்துள்ள அவர், இவை அனைத்துமே தமிழர்களால் மன்னிக்க முடியாத அயோக்கியத்தனங்கள் என்றும் கூறியுள்ளார்.
திருவள்ளுவர் தொடர்பான விவகாரத்தை மையமாகக் கொண்டு அரசியல் கட்சித் தலைவர்களிடையே கருத்து மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ