வள்ளுவரை வாழ விடுங்கள் – ஆளுநருக்கு வைரமுத்து கேள்வி?
சென்னை, 31 மே (ஹி.ச) திருவள்ளுவருக்கு காவி நிற ஆடை அணிவித்து சித்தரிப்பது தொடர்பாக பாடலாசிரியர் வைரமுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், திருவள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர்; காற்றுக்கு ஏன் காவிப்
Vaira


Nnn


சென்னை, 31 மே (ஹி.ச)

திருவள்ளுவருக்கு காவி நிற ஆடை அணிவித்து சித்தரிப்பது தொடர்பாக பாடலாசிரியர் வைரமுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர்,

திருவள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர்; காற்றுக்கு ஏன் காவிப் பூச்சு? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திருவள்ளுவர் மானுடத்தின் பொதுச்சொத்து. அவரை மத அடையாளங்களுக்குள் அடக்குவது வரலாற்றுப் பிழை. அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளை முன்னிறுத்திய வள்ளுவருக்கு குறிப்பிட்ட மதச் சின்னங்களை இணைப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுபோன்ற செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், வள்ளுவரை வாழ விடுங்கள்; தமிழர்கள் இதைத் தாங்கமாட்டார்கள் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ