உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி போதைப்பொருட்களுக்கு எதிராக உறுதியேற்போம் – வானதி சீனிவாசன்
சென்னை, 31 மே (ஹி.ச) உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, வானதி சீனிவாசன் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடு உடல்நல பாதிப்புகளை மட்டுமல்லாமல், சமூகச் சீர்கேடுகள் மற்று
Vanathi


Nb


சென்னை, 31 மே (ஹி.ச)

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, வானதி சீனிவாசன் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடு உடல்நல பாதிப்புகளை மட்டுமல்லாமல், சமூகச் சீர்கேடுகள் மற்றும் குற்றச் செயல்களுக்கும் காரணமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும், கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கருத்துகளை அவர் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ