Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மே (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்
உலகெங்கிலும் கடைபிடிக்கப்படுகிறது.
புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் கடுமையான உடல்நலக் கேடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்
இத்தினம் 1987ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளால் புகையிலையின் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகையிலை பயன்பாட்டைக் குறைக்கவும் அறிவிக்கப்பட்டது.
பாதிப்புகள்:
இது புகையிலை நுகர்வு புற்று நோய், இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் பிற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் புகையிலை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்
புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது.
நோக்கம்:
புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டு செல்வதும், புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
புகையிலை நிறுவனங்களின் வணிக உத்திகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், புகை பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து விடுபட ஊக்குவிப்பதும் ஆகும்.
Hindusthan Samachar / Durai.J