Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மே (ஹி.ச.)
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்
அப்பொழுது பேசிய அவர்,
இந்த வெற்றியினை கரூரில் உயிரிழந்த எங்கள் குடும்பத்தைச் சார்ந்த 41 உயிர்களுக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம், எங்களை பத்து தொகுதிகள் கூட வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறினார்கள்.
தமிழக மக்களும் பெண்களும் இளைஞர்களும் எங்களுக்கு இந்த அளவு வெற்றியை கொடுத்துள்ளார்கள்.
உங்களுக்கு பிரச்சாரம் செய்யக்கூட அனுமதி அடங்கவில்லை ஒரு அரசு அதன் அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை பிரச்சாரம் செய்யாமல் தடுத்தார்கள் ஆனால் மக்கள் இந்த அளவுக்கு எங்கள் வெற்றியை கொடுத்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது
கொளத்தூரில் முதலமைச்சர் தொகுதியில் ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது அதையும் தாண்டி மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.
இந்த தொகுதியில் ஊழல் செய்த அவர் குடும்பத்தை மட்டுமே வளர்த்தார் ஆனால் தொகுதிக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / Durai.J