Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மே (ஹி.ச)
தமிழ்நாட்டில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 5 மணி நிலவரப்படி 25 இடங்களில் வெற்றி பெற்ற தவெக 85 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
21 இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி 50 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ள அதிமுக 46 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை வகித்து வருகிறது.
இதனால் உற்சாகமடைந்த கட்சித் தொண்டர்கள் விஜய்யின் 'விசில் போடு' பாடலை பாடியும், கட்சியின் சின்னத்தை உயர்த்திப் பிடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b