கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு - களை இழக்கும் அண்ணா அறிவாலயம்
சென்னை, 04 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மாநிலம் முழுவதும் இன்று (04-05-26) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறு
Stalin Continues to Trail in Kolathur


சென்னை, 04 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மாநிலம் முழுவதும் இன்று (04-05-26) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

12.30 மணி நிலவரப்படி,

தவெக 109 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 68 தொகுதிகளிலும் திமுக கூட்டணியிலும் 57 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 31 அமைச்சர்களும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் 6-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைந்துள்ளார்.

கொளத்தூரில் 19,804 வாக்குகள் பெற்று தவெக பாபு முன்னிலையில் உள்ளார். மு.க.ஸ்டாலின் 17,975 வாக்குகள் பெற்று பின்னடைந்துள்ளார்.

இந்த நிலையில், திமுக அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயம் காலை இழந்து வருகின்றது.

திமுக கோட்டை எனப்படும் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

ஆட்சியில் இருந்த திமுக, தொடர் பின்னடைவை சந்தித்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை திமுகவினர் அகற்றியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b