Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 04 மே (ஹி.ச.)
நாட்டுக்கோழி வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு தொழிலாகும்.
நாட்டுக்கோழிகள் இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை மற்றும் எந்தவொரு தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ப வளரக்கூடியவை
நாட்டுக்கோழி வளர்க்கும் முறைகள்நாட்டுக் கோழிகளை அவற்றின் வசதி மற்றும் இடத்திற்கு ஏற்ப மூன்று முக்கிய முறைகளில் வளர்க்கலாம்.
மேய்ச்சல் முறை:
இது மிகவும் இயற்கை சார்ந்த முறையாகும்.
கோழிகள் பகல் நேரத்தில் திறந்தவெளியில் மேய்ந்து தங்களுக்குத் தேவையான பூச்சிகள், புழுக்கள் மற்றும் தானியங்களைத் தேடி உண்ணும்.
இரவு நேரத்தில் மட்டும் பாதுகாப்பான கொட்டகையில் அடைக்கப்படும்.
கூண்டு முறை:
சிறிய இடங்களில் அதிக கோழிகளை வளர்க்க இது ஏற்றது.
6 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட கம்பி வலைக் கூண்டுகளை அமைத்து வளர்க்கலாம்.
கொட்டகை அமைப்பு:
மழைநீர் தேங்காத உயரமான இடத்தில் கொட்டகை அமைக்க வேண்டும்.
50 கோழிகளுக்கு சுமார் 50 சதுர அடி இடம் தேவைப்படும்.
குஞ்சு பராமரிப்பு:
முட்டையிலிருந்து வெளிவந்த முதல் 4 வாரங்கள் வரை குஞ்சுகளுக்கு கூடுதல் வெப்பம் தேவைப்படும்.
தீவன மேலாண்மை:
கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்களுடன், புரதச் சத்திற்காக அசோலா வளர்த்து வழங்கலாம்.
இது தீவனச் செலவைக் குறைக்க உதவும்.
நோய் தடுப்பு:
நாட்டுக்கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க தகுந்த கால இடைவெளியில் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.
Hindusthan Samachar / Durai.J