Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 04 மே (ஹி.ச.)
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் உட்பட 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், விருத்தாசலத்தில் 18 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 5 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், விருத்தாசலம் தொகுதியில் 86.00 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 77.94 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை வாக்குப்பதிவு பெருமளவில் அதிகரித்துள்ளது.
விருத்தாசலம் தொகுதியில் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தேமுதிக நட்சத்திர வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் தமிழரசி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்தி தண்டபானி, தவெக சார்பில் விஜய் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தற்போது அதே தொகுதியில் அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 68,022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் - 68,022
தவெக - 66,074
பாமக - 59,783
2,198 வாக்குகள் வித்தியாசத்தில் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b