Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 04 மே (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும்நிலையில், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் திராவிட மணி வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொகுதிகளில் ஒன்றான கூடலூர் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ள தொகுதியாக இந்த சட்டமன்ற தொகுதி உள்ளது.
இங்கு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.
கூடலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கை
ஆண்கள் - 94,582
பெண்கள் - 1,00,727
மூன்றாம் பாலினம் - 3
மொத்தம் - 1,95,312
ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கூடலூர் தொகுதியில் 80.77% வாக்குகள் பதிவானது. இது கடந்த சட்டமன்ற தேர்தலை விட அதிகமான எண்ணிக்கையாகும். இந்நிலையில், கூடலூர் தொகுதியில் இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது. இஸ்லாமியர்கள், வன்னியர், பட்டியல் சமூக மக்கள், மலைவாழ் மக்கள் அதிகம் இருக்கும் இந்த தொகுதியில் திமுக சார்பில் திராவிடமணி போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் பொன். ஜெயசீலன், தவெக சார்பில் தீபக் சாய் கிஷோர், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் போட்டியிடுகின்றனர்.
கூடலூர் தொகுதியை பொறுத்தவரை வரை திமுகவுக்கு நல்ல வாக்கு வங்கி உள்ளது. ஆனால் கடந்த முறை சுமார் 2 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் காசிலிங்கம் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனிடம் தோல்வி அடைந்தார்.
ஆனால், அதற்கு முன்பு நடைபெற்ற 2006, 2011, 2016 தேர்தல்களில் திமுக வேட்பாளர்களே தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை திமுக தோல்வி அடைந்ததால், இந்த முறை வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் திமுக நிர்வாகிகள் கடந்த ஒரு மாதமாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர்.
அதிமுக தரப்பிலும் தொகுதியை மீண்டும் வசப்படுத்த வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த தொகுதியில் மற்ற கட்சிகள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கும் நிலையில் திமுக-அதிமுக வேட்பாளர்களிடையே நேரடி போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1952-க்கு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு உதகமண்டலம் தொகுதி இதுவரை 15 பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் திமுக 6, அதிமுக 3, காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த முறை திமுக, அதிமுக இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இருப்பினும், இறுதியில் திமுக-வின் திராவிட மணி வெற்றிப் பெற்றார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக-வின் பொன் ஜெயசீலனைவிட 22 ஆயிரத்து 833 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிப் பெற்றுள்ளார். 65,590 வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN