கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வி முகம்!
சென்னை, 04 மே (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கள
MK Stalin


சென்னை, 04 மே (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார்.

தவெக சார்பில் வி.எஸ். பாபுவும், நாம் தமிழர் கட்சி சார்பில் செளந்தரபாண்டியனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலாகவே, கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு முன்னிலை வகித்து வருகிறார்.

பொதுவாக, கொளத்தூர் தொகுதி ஸ்டாலினின் கோட்டையாக கருதப்படும் நிலையில், அவரே பின்னடவை சந்தித்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

20வது சுற்று முடிவில் ஸ்டாலின் 1,77,756 வாக்குகளை பெற்றிருந்தார்.

தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 1,82,382 வாக்குகளை பெற்று சுமார் 4,626 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இன்னமும் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டிய நிலையில், ஸ்டாலினின் தோல்வி உறுதியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த 2011 முதல் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.

மு.க. ஸ்டாலின் களமிறங்கியதால் விஐபி அந்தஸ்தை பெற்றுவிட்டது கொளத்தூர் தொகுதி. தொடர்ந்து, மூன்று முறை இத்தொகுதியை கைப்பற்றிய அவர், தற்போது 4வது முறையாக இங்கு களம் கண்டார்.

கிட்டத்தட்ட திமுகவின் கோட்டையாக பார்க்கப்படும் கொளத்தூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,07,251 பேர். இவர்களில் 85.91 சதவீத்தினர் வாக்களித்துள்ளனர்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமியும், விஜய்யும் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது, இங்குள்ள குறைகளை சுட்டிக்காட்ட தவறவில்லை.

ஒரு முதலமைச்சரின் தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு பிரதானமாக முன் வைக்கப்பட்டது. இதனையும் ஒரு குற்றச்சாட்டாக எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

குறிப்பாக, சொல்லும்படியாக உயர் கல்வி நிறுவனங்களும், ஐடி நிறுவனங்களும் இங்கு இல்லை. எனவே, இந்த தேவைகளுக்காக மக்கள் சென்னையின் மத்திய பகுதிக்கும், புறநகர் பகுதிகளுக்குமே செல்ல வேண்டியுள்ளது.

தற்போதைய கள நிலவரத்தை வைத்து பார்க்கும் போது, கொளத்தூர் தொகுதி தவெக வசமே செல்ல இதுதான் காரணம் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN