தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை - பிற்பகல் 3 மணி அளவில் முன்னிலை நிலவரம்
சென்னை, 04 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மாநிலம் முழுவதும் இன்று (04-05-26) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறு
ஹி.ச


சென்னை, 04 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மாநிலம் முழுவதும் இன்று (04-05-26) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி தவெக 109, திமுக 63, அதிமுக 56 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டியில் உள்ளன.

தமிழகம் முழுவதுமே மண்டலங்கள் கடந்து பரவலாக தவெக தொடர் முன்னிலையில் இருக்கிறது.

துவரை முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவந்த நிலையில் மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் P.விஸ்வநாதன், கூடலூரில் திமுக வேட்பாளர் திராவிட மணி வெற்றி,மதுரை தெற்கு தொகுதியில் த.வெ.க வேட்பாளர் கோபிசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதில் உச்சபட்சமாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

அவரைப் போலவே சீனியர் அமைச்சர்கள் பலரும் பின்னடைவை சந்தித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b