Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 04 மே (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (மே 4) வெளியாகி வரும் நிலையில், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.
மதுரை வடக்கு தொகுதியில் மொத்தம் 19 சுற்று வாக்கு எண்ணிக்கையில், 72,853 வாக்குகள் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் கல்லாணை வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட 18018 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி உட்பட திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, திருமங்கலம் உட்பட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
இந்நிலையில் மதுரை வடக்கு தொகுதி மக்களிடையே வெற்றி வாகை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் அதிகம் இருக்கும் தொகுதியாக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உள்ளது.
இந்த சட்டமன்றத் தொகுதியில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏராளமானோர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்த தொகுதியில் 1,07,416 ஆண் வாக்காளர்களும், 1,13,708 பெண் வாக்காளர்களும், 50 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,21,175 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான வக்குப்பதிவில், 72.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 64.39 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை வாக்குப்பதிவு கணிசமாக அதிகரித்துள்ளது.
இம்முறை மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கோ.தளபதி, அதிமுக சார்பில் மருத்துவர் சரவணன், நாதக சார்பில் திருநாவுக்கரசு, தவெக சார்பில் கல்லாணை ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் திமுகவுக்கும், அதிமுகவுக்கு நேரடி போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் களத்தில் கடுமையாக வேலை செய்துள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தற்போது வரை கணிக்க முடியாததாகவே உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு இந்த தொகுதி கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக 2 முறை, திமுக ஒரு முறையும் வென்றுள்ளன.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்
வென்றுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN