மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி
மதுரை, 04 மே (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தலின் மேலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 58419 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து 2வது இடத்தில் உள்ள அதிமுக
Congress


மதுரை, 04 மே (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தலின் மேலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 58419 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவரை தொடர்ந்து 2வது இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் 56744 வாக்குகள் பெற்றுள்ளார்.

3வது இடத்தில் தவெக வேட்பாளர் மதுரைவீரன் 57361 வாக்குகள் பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் மேலூர், மதுரை மேற்கு, மதுரை கிழக்கு உட்பட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

இந்த மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் முக்கிய தொகுதியாக விளங்கும் மேலூர் தொகுதியில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் அதிகம் இருக்கும் தொகுதியாக மேலூர் சட்டமன்ற தொகுதி உள்ளது.

மேலும் இந்த தொகுதியில் நடுத்தர மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

இந்த தொகுதியில் 1,14,032 ஆண் வாக்காளர்களும், 1,15,778 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும் மொத்தம் 2,29,821 வாக்காளர்கள் உள்ளனர்.

ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மேலூர் தொகுதியில் 82.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 74.83 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை பெருமளவில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பெரியபுள்ளான் என்கிற செல்வம், காங்கிரஸ் சார்பில் விஸ்வநாதன், நாதக சார்பில் வழக்கறிஞர் கோட்டைக்குமார், தவெக சார்பில் மதுரை வீரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலூர் தொகுதியில் கடைசி 5 தேர்தல்களில் தொடர்ச்சியாக அதிமுகவே வென்றுள்ளது அந்த வகையில் அதிமுகவின் கோட்டையாக விளங்குகிறது. மறுபக்கம் காங்கிரஸ் கட்சி தொடர் வெற்றியை முறியடிக்க தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு தேர்தல்களில் அதிமுக சார்பில் பெரிய புள்ளான் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021 தேர்தலில் 35,162 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் ரவிச்சந்திரனை தோல்வியுறச் செய்தார்

மேலூர் சட்டமன்ற தொகுதி கடந்த 1952ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஒரு முறை திமுக, 7 முறை காங்கிரஸ், 6 முறை அதிமுக, ஒரு முறை தமாகாவும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகள் தெரிகின்றன.

அதே வேளையில் காங்கிரஸ், அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN