புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - என்.ஆர். காங்கிரஸ் 11 தொகுதிகளில் முன்னிலை
புதுச்சேரி, 04 மே (ஹி.ச.) புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி, 11 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களிலும், பாஜக, திமுக, அதிமுக தலா ஒரு தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்
N.R. Congress leads


புதுச்சேரி, 04 மே (ஹி.ச.)

புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி, 11 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

சுயேட்சைகள் 3 இடங்களிலும், பாஜக, திமுக, அதிமுக தலா ஒரு தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றன.

புதுச்சேரியில் மண்ணாடிப்பட்டு, ஊசுடு, வில்லியனுார், கதிர்காமம், தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, நிரவி திருபட்டினம், மாஹே, ஏனாம் ஆகிய 17 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

அதில் என்.ஆர் காங்கிரஸ் 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தட்டாஞ்சாவடியில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமியும், முத்தியால்பேட்டில் வையாபுரி மணிகண்டனும், அரியாங்குப்பத்தில் அய்யப்பனும், ஏனாமில் மல்லாடி கிருஷ்ணாராவும் முன்னிலையில் உள்ளனர்.

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி முன்னிலையில் உள்ளார்.

தவெக 2-ம் இடத்திலும், 3-ம் இடத்தில் சுயேட்சையும் இடம் பிடித்து 4-வது இடத்தில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் எம்பி வைத்திலிங்கம் உள்ளார்.

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தலைவர் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனத்தலைவர் ரங்கசாமிக்கும், காங்கிரஸ் மாநிலத்தலைவர் எம்பி வைத்திலிங்கத்துக்கும் இடையே போட்டி நிலவியது.

Hindusthan Samachar / vidya.b