புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை - பிற்பகல் 3 மணி அளவில் முன்னிலை நிலவரம்
புதுச்சேரி, 04 மே (ஹி.ச.) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்று முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.,அ.தி.மு.க.,-ல.ஜ.க., ஒரு அணியாகவ
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை - பிற்பகல் 3 மணி அளவில் முன்னிலை நிலவரம்


புதுச்சேரி, 04 மே (ஹி.ச.)

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்று முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.,அ.தி.மு.க.,-ல.ஜ.க., ஒரு அணியாகவும், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கின. மேலும் த.வெ.க., மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்தனியாக போட்டியிட்டன.

மொத்தமுள்ள 30 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இரு கட்டங்களாக பிரித்து எண்ணப்படுகிறது. முதல் கட்டத்தில் 17 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி ஆளும் என்டிஏ கூட்டணி: 22 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி: 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்.,-பா.ஜ., ஆட்சியை பிடிக்கிறது.தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட என். ரங்கசாமி 5,456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2வது இடத்தில் தவெக கூட்டணி நேயம் மக்கள் கழகம் வேட்பாளர் விநாயகம் 5,583 வாக்குகள் பெற்று 2வது இடமும், சுயேச்சை வேட்பாளர் சேது (எ) சேதுசெல்வம் 3,984 வாக்குகளை வாங்கி 3வது இடத்திலும் உள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் 2,990 வாக்குகள் பெற்று 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். தற்போதைய எம்பியும், மாநில காங்கிரஸ் தலைவரான வைத்திலிங்கம் டெபாசிட் இழந்ததால் காங்கிரசார் சோர்வடைந்துள்ளனர்.

உப்பளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பழகன் 9,099 வாக்குகள் பெற்று, 1026 வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

தவெக வேட்பாளர் சிவா 8,073 வாக்குகள் பெற்று 2ம் இடமும், திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி 5,327 வாக்கு பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

முத்தியால்பேட்டை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வையாபுரி மணிகண்டன் 8,382 வாக்குகள் பெற்று, 952 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈரம் ராஜேந்திரன் 7,430 வாக்குகள் பெற்று 2வது இடமும், தவெக வேட்பாளர் பிரகாஷ்குமார் 3,611 வாக்குகள் பெற்று 3வது இடமும் பிடித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b