Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் திமுக+, அதிமுக+, தவெக, நாதக என 4,000-க்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு மயிலாப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டு அதில் பாஜக வேட்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார்.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் சூழலில் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில்,
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கைக்காக கிளம்பி கொண்டிருக்கிறேன். அரசியலில் எனது பல ஆண்டுகால போராட்டத்திற்கு இன்று ஒரு பதில் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்... ஆளுநராக இருந்து இதற்கு ஏன் போட்டி போடுகிறார்கள்? பதவி ஆசை என்றனர் சிலர்.. பரிகசிப்பவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை, என் கவலை எல்லாம் பரிதவிப்பவர்களை பற்றியே..
ஆம் நான் போட்டி போட்டது பதவிக்கு ஆசைப்பட்டு அல்ல, பரிதவிப்பவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிக்கு ஆசைப்பட்டு! சட்டமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழ் மகளின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே... தமிழ் மண்ணின் குரலாக மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழ் பெண்ணின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்... இறைவன் வெற்றியைத் தந்து அருள் புரிவான் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN