மன்னாராட்சி மரபு முடிவுக்கு வரும்! பிறப்பால் இனி யாரும் முதல்வராக முடியாது! - ஆதவ் அர்ஜுனா
சென்னை, 04 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. நடந்து முடிந்த தேர்தலில் திமுக+, அதிமுக+, தவெக, நாதக என 4,000-க்கு அதிகமான வே
TVK Aadhav Arjuna


சென்னை, 04 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக+, அதிமுக+, தவெக, நாதக என 4,000-க்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட இருக்கிறது.

நடந்து முடிந்த தேர்தலை நான்கு முனை போட்டி என்று கூறி வருகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூட திமுக தான் ஆட்சி அமைக்கும் என்பது போல தகவல்கள் வெளியாகி வந்தன.

அதே நேரத்தில் தவெக நிர்வாகிகள் தவெக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து, தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் தளத்தில்,

தமிழ்நாட்டில் இன்று காலை உருவாகும் 'மாற்றத்திற்கான புயல்' நாள் முழுவதும் வீறு கொண்டு வீசும்! சரியாக, மாலை 7 மணிக்கு 'தேர்தல் முடிவுகள்' எனும் அந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, அதன் வேகத்தில் 75 வருடங்கள், 50 வருடங்கள் என ஆதிக்கம் செலுத்தித் தூர்ந்து போன பழைய மரங்கள் மக்கள் சக்தி என்னும் விசையால் வேருடன் பிடுங்கி எறியப்படும்! மன்னாராட்சி மரபு முடிவுக்கு வரும்! பிறப்பால் இனி யாரும் முதல்வராக முடியாது!

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN