Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மே (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியன் தோல்வியடைந்தார்.
இங்கு தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று சைதாப்பேட்டை. 2026 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் 15 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.
திமுக சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் களத்தில் இருக்கிறார்.
இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தமிழன் போட்டியிடுகிறார்.
அதே நேரம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஸ்ரீவித்யா, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அருள் பிரகாசம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இத்தொகுதியில் 98,535 ஆண் வாக்களர்கள், 1,05,549 பெண் வாக்காளர்கள், 62 மூன்றாம் பாலினித்தவர்கள் என மொத்தம் 2,04,146 வாக்களர்கள் உள்ளனர். இவர்களில் 74.84 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.
திமுகவின் கோட்டையாக கருதப்படும் சைதாப்பேட்டை தொகுதியில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக களமிறங்கிய மா.சுப்ரமணியன், அதிமுக வேட்பாளர் சைதை சா. துரைசாமியை 29,408 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். எனவே இந்த முறையும் மா. சுப்பிரமணியனுக்கே இங்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
ஆனால், புதுவரவான விஜய்யின் தவெக, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தவெக வேட்பாளர் அருள் பிரகாசம், திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியனை விட 24,451 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இதனால் மா. சுப்பிரமணியன் தோல்வி அடைவது உறுதியாகியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN