தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை - த.வெ.க தொடர்ந்து முன்னிலை 3வது இடத்தில் திமுக
சென்னை, 04 மே (ஹி.ச.) தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவ
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை - த.வெ.க தொடர்ந்து முன்னிலை 3வது இடத்தில் திமுக


சென்னை, 04 மே (ஹி.ச.)

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி தவெக: 105, அதிமுக: 81, திமுக: 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை நிலவரப்படி அதிமுக 2-ம் இடத்திலும், திமுக 3-ம் இடத்திலும் இருக்கின்றன.

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் அங்கம் வகிக்கும் 21 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினும் ஒருவர்.

தமிழகத்தில் உள்ள 34 அமைச்சர்களில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்கள் தற்போதைய நிலவரப்படி பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ஆர். காந்தி மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், சக்கரபாணி, முத்துசாமி, தாமோ அன்பரசன், மதிவேந்தன், கோவி. செழியன், ராஜேந்திரன், எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, கீதா ஜீவன், அன்பில் மகேஷ், கே.என்.நேரு, சாமிநாதன், நாசர், துரைமுருகன் உள்ளிட்ட 22 அமைச்சர்களும், முக்கிய முகங்களும் பின்னடைவில் இருப்பது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b