Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மே (ஹி.ச.)
தமிழக வெற்றி கழகம் எனும் கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் அக்கட்சி தலைவர் நடிகர் விஜய், தனது முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்.
233 தொகுதிகளிலும் தனித்து களம்கண்ட விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிட்டார்.
தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளார்.
பெரம்பூரில் அவர் 54,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெறுவதற்காக விஜய் தனது வீட்டில் இருந்து வாக்கு எண்ணும் மையமான லயோலா கல்லூரிக்கு வருகை தந்தார்.
அவருக்கு தேர்தல் அலுவலர் வெற்றிக்கான சான்றிதழை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட விஜய், சான்றிதழை தூக்கிப் பிடித்தபடி, சிரித்த முகத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இரவு 8 மணி நிலவரப்படி 72 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தவெக 36 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
45 இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக 29 முன்னிலையில் உள்ளது.
32 இடங்களில் வெற்றி பெற்றுள்ள அதிமுக 20 முன்னிலையில் உள்ளது.
Hindusthan Samachar / vidya.b