Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மாநிலம் முழுவதும் இன்று (04-05-26) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், திருவொற்றியூர், போளூர், திருவண்ணாமலை, ஒட்டபிடாரம், ஸ்ரீ வைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி,
அதிமுக 64, திமுக 40, பாமக 6, காங்கிரஸ் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதேபோல் பாஜக 3, சிபிஐ 2, சிபிஎம் 1, விசிக 1, அமமுக 1, தேமுதிக 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
Hindusthan Samachar / vidya.b