Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மே (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கம் முதலே நடிகர் விஜய்யின் தவெக, தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இதில் பெரம்பூர் தொகுதியில் சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிளப்பு தொகுதியில் 26,000 வாக்குகள் வித்தியாத்திலும் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சி கிழக்கில் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
இதனிடையே திமுக 75-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், அதிமுக 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மாதவரம் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்ட பிரபு தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சுமார் 83,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். தவிர தூத்துக்குடி, தாம்பரம், தஞ்சை, மதுரை தெற்கு, அரக்கோணம்,மாதவரம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b