Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 04 மே (ஹி.ச.)
மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது.
இதனையொட்டி இன்று (மே 4) வாக்குகள் எண்ணும் பணியானது துரிதகதியில் நடைபெற்று வருகின்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளிலும், அதிமுக 54 தொகுதிகளிலும், திமுக 54 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதனிடையே மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோபிசன் வெற்றி பெற்றார்.
21,562 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்துப்போட்டியிட்ட திமுகவின் பூமிநாதன் (33879), பாஜகவின் ராம சீனிவாசன் (25727) வாக்குகளை மட்டுமே பெற்றனர்.
Hindusthan Samachar / vidya.b