தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி த.வெ.க முன்னிலை- திமுக பின்னடைவு
சென்னை, 04 மே (ஹி.ச.) தமிழ்நாடு 17-ஆவது சட்டமன்றத்தின் பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பே
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி த.வெ.க முன்னிலை திமுகவிற்கு பின்னடைவு


சென்னை, 04 மே (ஹி.ச.)

தமிழ்நாடு 17-ஆவது சட்டமன்றத்தின் பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர்.

மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில், 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி தவெக 79, அதிமுக 59, திமுக 54 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b