Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மாநிலம் முழுவதும் இன்று
(04-05-26) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 10 மணி நிலவரப்படி, த.வெ.க 92 இடங்களிலும், திமுக கூட்டணி 53 இடங்களிலும், அதிமுக கூட்டணி 66 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 31 அமைச்சர்களும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.
திமுக கோட்டை எனப்படும் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.
இதனிடையே தேர்தல் ஆணையம் முன்னிலை விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, த.வெ.க 45 இடங்களிலும், அதிமுக 41 இடங்களிலும், தி.மு.க 19 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
அதே போல், பா.ம.க 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பா.ஜ.க 1 தொகுதியிலும், தேமுதிக 1 இடத்திலும், கம்யூன்ஸ்ட் கட்சி 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b