Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 04 மே (ஹி.ச.)
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சிட்டிங் எம்எல்ஏ டாக்டர் வை முத்துராஜா 700 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரை விட முன்னிலை வைக்கிறார்.
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் முகமது பர்வேஸ் முன்னிலை வைக்கிறார்.
கந்தர்வகோட்டை தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்கிறார்.
ஆலங்குடி திமுக அமைச்சர் மெய்ய நாதன் அதிமுக வேட்பாளரை விட 2000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறி வருகிறார்.
திருமயம் வேட்பாளர் அமைச்சர் ரகுபதி அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை விட 1700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
விராலிமலை வேட்பாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழக வேட்பாளரை விட முன்னணியில்.
இந்த தொகுதியில் திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
Hindusthan Samachar / Durai.J