கேரளாவில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் - பெரும்பான்மையை நெருங்கும் காங்கிரஸ் கூட்டணி
திருவனந்தபுரம், 04 மே (ஹி.ச.) கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. மொத்தம் 140 தொகுதிகள் இருக்கும் நிலையில் பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவைப்படுகிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி,
கேரளாவில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் - பெரும்பான்மையை நெருங்கும் காங்கிரஸ் கூட்டணி


திருவனந்தபுரம், 04 மே (ஹி.ச.)

கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. மொத்தம் 140 தொகுதிகள் இருக்கும் நிலையில் பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவைப்படுகிறது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை இந்த தேர்தலில் பிரதான அணிகளாக களமிறங்கின.

தற்போதைய நிலவரப்படி, ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி 30 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 இடத்தில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.

மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டன.

இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிட்டது.

இதர தொகுதிகள் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.

அருதிப் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 70க்கும் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அக்கூட்டணி ஆட்சியை கைப்பற்ற இருக்கிறது.

Hindusthan Samachar / vidya.b