Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 04 மே (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (மே 4) வெளியாகி வருகின்றது.
மதுரை மாநகராட்சியில் 5 தொகுதிகள், திருமங்கலம் உட்பட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
இந்நிலையில் திருமங்கலம் தொகுதி திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.
இந்தத் தொகுதியில் 1,26,708 ஆண் வாக்காளர்களும், 1,34,521 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,61,238 வாக்காளர்கள் உள்ளனர். திருமங்கலம் தொகுதியில் 87.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக சார்பில் மணிமாறன், நாதக சார்பில் முனீஸ், தவெக சார்பில் சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் திமுகவுக்கும், அதிமுகவுக்கு நேரடி போட்டி நிலவி வந்தது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் திருமங்கலம் திமுக வேட்பாளர் சேடப்பட்டி மு மணிமாறன் 18,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் தோல்வி அடைந்தார்.
Hindusthan Samachar / vidya.b