Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 மே (ஹி.ச.)
தமிழகத்தில் புதிய அரசு அமைவதையொட்டி அமைச்சரவை பட்டியல் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் தவெக பொதுச்செயலாளரும் தி.நகர் எம்.எல்.ஏவுமான என். ஆனந்த், எம்.எல்.ஏக்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், சி.டி.ஆர். நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களை தவிர, விஜய் சரவணன், தமிழன் பார்த்திபன், முகமது பர்வேஸ், சத்யபாமா, கல்லாணை, விஜயலக்ஷ்மி உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான விரிவான ஆலோசனை கூட்டம் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் அமைச்சரவை பொறுப்புகள், துறைகள் ஒதுக்கீடு மற்றும் பதவியேற்பு விழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P