த.வெ.க தலைவர் விஜய்யின் தொலைநோக்கு பார்வை, மனிதநேயம் ஆகியவற்றால் ஆட்சி சிறப்பாக இருக்கும் - செங்கோட்டையன் நம்பிக்கை
கோவை, 05 மே (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் சென்னை செல்ல இன்று கோவை விமான நிலையம் வந்தனர். அப்போது தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ப
த.வெ.க தலைவர் விஜய்யின்  தொலைநோக்கு பார்வை, மனிதநேயம் ஆகியவற்றால் ஆட்சி சிறப்பாக இருக்கும் -  செங்கோட்டையன் நம்பிக்கை


கோவை, 05 மே (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் சென்னை செல்ல இன்று கோவை விமான நிலையம் வந்தனர்.

அப்போது தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் போலீஸ் எஸ்காட் பாதுகாப்புடன் விமான நிலையம் வந்தார்.

பீளமேடு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கோபி தொகுதி எம்எல்ஏ செங்கோட்டையன் கூறியதாவது,

மக்கள் வைத்திருக்கும் அன்பும் ஆதரவும் தான் இந்த வெற்றிக்குக் காரணம். ஒரு இயக்கம் வளர வேண்டும் என்றால் தியாகம் அவசியம். அண்ணா, புரட்சி தலைவர், அம்மா ஆகியோரின் தியாகத்தால் வளர்ந்த அதிமுக இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறது.

ஒருவன் தான் எல்லாம் என்று நினைத்தால் தெய்வம் யார் என்பதை காட்டிவிடும். தெய்வத்தின் அருளால் இன்று தலைவர் ஆட்சிக்கட்டிலில் அமர உள்ளார். இது மக்கள் சக்தியாக மாறியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது வரலாற்றுச் சாதனை.

தலைவரின் தொலைநோக்கு பார்வை, மனிதநேயம் ஆகியவற்றால் ஆட்சி சிறப்பாக இருக்கும். பெரும்பான்மை பலம் குறித்து நாளை பொறுத்திருந்து பாருங்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b